fbpx

சின்ன வெங்காயம்… போதிய விலை கிடைக்காததால்… விவசாயிகள் நேரடி விற்பனை..!

நெல்லையில் தற்போது சின்ன வெங்காயம் அதன் அளவுகள் மற்றும் தரத்தைப் பொறுத்து குறைந்தது 20 ரூபாய் முதல் 32 ரூபாய் வரை சில்லறை விலைக்கு விற்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து சின்ன வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை.

இதனால் சில இடங்களில் விவசாயிகள் நேரடியாகவே வெங்காய விற்பனையில் இறங்கியுள்ளனர். இதுபற்றி தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் பகுதியில் வயலை ஒட்டி உள்ள சாலையோரம் சின்ன வெங்காயம் விற்பனை செய்து கொண்டிருந்த கீழத்தென்கலத்தைச் சேர்ந்த விவசாயி முருகனிடம் கேட்டபோது, நான் அரை ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளேன். இதற்கு விதை உள்ளி, பூச்சி மருந்து, உரம், களை வெட்டுகூலி, உழவுகூலி உட்பட அனைத்தும் சேர்த்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. விளைச்சல் 1,500 கிலோ சின்ன வெங்காயம் கிடைக்கும். தற்போது உற்பத்தி அதிகம் இருந்தாலும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.

மேலும் மொத்த வியாபாரிகளிடம் கொடுத்தால் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் மொத்தம் 37,500 ரூபாய் வரை எனக்கு வருமானம் கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் அளவு, தரம், ஈரப்பதத்தைப் பொறுத்து 10 ரூபாய் முதல் அதிகபட்சம் 25 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால் மூன்று மாதங்கள் பராமரித்து, செலவுகள் செய்யும் விவசாயிகளுக்கு குறைவான அளவே லாபம் கிடைக்கும். எனவேதான் நான் உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்தை மூன்றரை கிலோ 100 ரூபாய்க்கு நானே விற்பனை செய்கிறேன் என்றார் அந்த விவசாயி. இதேபோல பல விவசாயிகள் நேரடியாக தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றை வயல் பகுதியிலேயே விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

Baskar

Next Post

நாட்டிலேயே அதிக கொலைகள் நடந்தது எந்த மாநிலத்தில் தெரியுமா..? அதிர்ச்சி தகவல்..

Tue Aug 30 , 2022
நாடு முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.. இந்நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) படி, 2021ல் பதிவான கொலை வழக்குகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.. அதன்படி இந்தியாவில் மொத்தம் 29,272 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020ல் 29,193 ஆகவும், அதற்கு 2019-ம் ஆண்டு 28,915 ஆகவும் இருந்தது. மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,132 ஆகவும் […]

You May Like