fbpx

கஞ்சா விற்ற சின்னத்திரை நடிகை..!! கையும் களவுமாக சிக்கியது எப்படி..? திரையுலகில் பெரும் பரபரப்பு..!!

கேரள மாநிலம் கொச்சியில் அருகே உள்ள இடப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று விசாரணை நடத்தியதில், எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார், அந்த வீட்டில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணாவிடம் (29) விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருடன் சேர்ந்து சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணா போதை பொருள் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. தற்போது நடிகை அஞ்சு கிருஷ்ணாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் சலீமை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

கோடைக்கால வியர்வையும்! பூஞ்சைத் தொற்று அபாயமும்!... நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்!

Fri Mar 24 , 2023
கோடைக்காலத்தில் நமது உடலில் உண்டாகும் அதிக வியர்வையினால் நகங்களில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க சில வழிமுறைகள் குறித்த வல்லுநரின் குறிப்புகளை பார்க்கலாம். கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே பல நோய்களையும் கொண்டு வரும். வியர்வை சுரப்பிகளைத் தடுக்க சருமத்தில் இறந்த சரும […]

You May Like