fbpx

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயம்… புதிய உத்தரவு!!

கடைகளில் ஆவின் பால் வாங்குவதற்கு இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயமாக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதை தமிழக அரசு நிறைவேற்றி பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தியது. அதே போல விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே மாதாந்திர அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.46 என்ற விலைக்கு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் மாதாந்திர அட்டைகள் வைத்திருப்பவர்கள் குறைந்த விலைக்கு பால் வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்று வருவதாக புகார்கள் குவிந்துள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில் ஆவின் மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஸ்மார்ட் கார்டை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மண்டலங்களிலும் ஆவின் மாதாந்திர அட்டையுடன் ஸ்மார்ட் அட்டையை இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் ஸ்மார்ட் கார்டை இணைத்துக்கொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால் குறைந்த விலையில் மாதாந்திர அட்டை உபயோகம் செய்து பாலை வாங்கி வெளியில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Next Post

PHONE PAY, GOOGLE PAY போன்ற நிறுவனங்கள் தினசரி பரிவர்த்தனை லிமிட் அமல்படுத்த யோசனை….

Wed Nov 23 , 2022
PHONE PAY, கூகுள்பே உள்ளிட்ட யுபிஐக்கு ரிசர்வ் வங்கி தினசரி பணப் பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் யுபிஐ செயலிகள் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே பணப்புழக்கம் குறைக்கப்பட்டு அனைவரும் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிவர்த்தனை செய்கின்றனர். இதனால், அதிக அளவுக்கு பணம் பரிவர்த்தனை நடக்கின்றது. மக்கள் பெரிய தொகையை கையில் எடுத்துச் […]
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..!! இனி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்..!! முக்கிய அறிவிப்பு

You May Like