ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிக்கார்ட் நிறுவனம், பண்டிகை காலங்களில் பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது நடைபெறும் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட் டிவி-ஐ மலிவான விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் சேலில் விற்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிளிப்கார்ட் விற்பனையில் Blaupunkt TV-களில் 45% வரை பிரத்யேக தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருந்தால், கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம். Blaupunkt-ன் இந்த டிவி-ஐ பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஸ்பெஷலில் ரூ.9,999 என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இந்த விற்பனையில், Blaupunkt ரசிகர்கள் சமீபத்தில் கூகுள் டிவி மற்றும் பிற பொருட்களுடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட QLED தொடர்களையும் பெறலாம்.
தாம்சனின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட QLED தொலைக்காட்சிகளையும் மிகவும் மலிவு விலையில் வாங்க வாடிக்கையாளர்களுக்கு அரிய வாய்ப்பு உள்ளது. சிட்டி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையின் போது கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம். தாம்சங்கின் சிறந்த மாடல்களான 42PATH2121-ஐ 14,999 ரூபாயிலும், 43PATH4545BL-ஐ 19,999 ரூபாயிலும், 50PATH1010BL BL-ஐ 24,999 ரூபாயிலும், 55 OP MAX9055-ஐ 28,999 ரூபாயிலும் 75 OATHPRO2121-ஐ 79,999 ரூபாயிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட QLED மாடல் மற்றும் அதிகம் விற்பனையாகும் Q50H1000-ஐ 31,999 ரூபாயிலும் Q55H1001-ஐ 37,999 ரூபாயிலும் வாங்க முடியும்.