fbpx

விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில் 14,000-க்கும் அதிகமானோர் பதிவு…!

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர். 31.10.2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5510 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1568 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2287 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1282 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 384 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 1286 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1894 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.பதிவு செய்தவர்கள் தொடர்பான மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டம் 17.09.2023 அன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

Vignesh

Next Post

நல்லது பண்ண போய் இப்படி சிக்கிடீங்களே..! பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கியா பாஜக பிரமுகர் கைது..!

Sat Nov 4 , 2023
சென்னையில் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை பெண் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சென்னையில் ஒரு அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கிட்டில் ஆபத்தாக நின்றதுடன், படிக்கட்டு அருகே உள்ள ஜன்னலில் ஏறி ஆபத்தாக பயணித்திருந்தனர், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் நடத்துனரை கண்டபடி வார்த்தைகளால் திட்டி விட்டு, ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை கடுமையாக […]

You May Like