fbpx

இதுவரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன!… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இதுவரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மே 19-ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில், அனைத்து வங்கிகளிலும் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு வரும் நிலையில்,ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்றும், சந்தையில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 76% திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

காஷ்மீர் 370-வது பிரிவு ரத்து வழக்கு...! 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11-ம் தேதி விசாரணை...!

Tue Jul 4 , 2023
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் […]

You May Like