தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் இந்தாண்டு கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஏசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான், Haier நிறுவனம் புதிய ஏர் கண்டிஷனர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் AI டெக்னாலஜியும் உள்ளது கூடுதல் சிறப்பு.
AI டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டு பயனர்களின் பழக்கங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், 7 விதமான குளிரூட்டும் வசதிகள் வழங்குவதால், குளிரின் அளவை பயனர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். AI தொழில்நுட்பம் மூலம், AC உள்ளே மற்றும் வெளியே உள்ள வெப்ப நிலைகளை துல்லியமாக கணிக்க முடியும். அதற்கேற்ப வெப்பநிலையை தானாகவே தேர்வு செய்து கொள்ளும்.
Haier கூற்றின்படி, புதிய AC-களில் உள்ள AI Electricity Monitoring அம்சம் மூலம் HaiSmart app வழியாக மின் பயன்பாட்டை கண்காணித்துக் கொள்ள முடியும். இந்த செயலியில் மணி, ஒருநாள், வாரம் மற்றும் மாதம் அடிப்படையில் மின்சாரம் எவ்வளவு செலவாகியுள்ளது என்பதை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல், பயனர்கள் energy goal அமைத்து, அலெர்ட்களுடன் மின் நுகர்வை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், இந்த AC-க்களில் Supersonic Cooling தொழில்நுட்பம் உள்ளது. இது 10 விநாடிகளில் குளிரூட்டும் திறன் கொண்டது. அதற்காக High-Frequency Pulse Control பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், Frost Self-Clean Technology உள்ளதால் 21 நிமிடங்களில் 99.9% தானாக சுத்தம் செய்து கொள்ளும். இந்த புதிய ஏ.சி. மொத்தம் 7 மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.51,990 முதல் தொடங்குகிறது. இந்த ஏ.சி.கள் Haier-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் உள்ளிட்ட தளங்களில் வாங்கிக் கொள்ளலாம்.
Read More : 2-வது கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிளஸ்2 மாணவனுடன் ஓட்டம்..!! ஊர் பஞ்சாயத்து வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!!