fbpx

முட்டைக்கோஸ் சாற்றில் இத்தனை நன்மைகளா?… முட்டைக்கோஸ் ஜூஸ் தயாரிக்கும் முறை இதோ!…

முட்டைக்கோஸ் ஜூஸ் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்

முட்டைக்கோஸை பொரியல், குழம்புகளில் சேர்த்து உட்கொள்வோம். இதனால் வாயு தொல்லை ஏற்படும் என்பதால் பலர் இதனை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இந்த முட்டைகோஸில் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பல சத்துக்கள் உள்ளது. அதே சமயம், முட்டைக்கோஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் முட்டைக்கோஸ் சாறு உட்கொண்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இன்று நாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

பொட்டாசியம் நிறைந்துள்ள முட்டைகோஸ், அதிகரித்த கொழுப்பைக் கட்டுப்படுத்தும். இரத்த அழுத்த பிரச்சனையால் சிரமப்படுகிறீர்கள் என்றால், தினமும் முட்டைக்கோஸ் சாற்றை உட்கொள்ளலாம். முட்டைக்கோஸ் சாறு குடிப்பதன் மூலம், எடையை எளிதில் குறைக்கலாம். மறுபுறம், தினமும் முட்டைக்கோஸ் சாறு குடித்து வந்தால், உடல் பருமன், வாயு பிரச்சனை மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வைட்டமின் சி உள்ள முட்டைக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. எனவே முட்டைக்கோஸ் சாற்றை உணவில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்.

முட்டைக்கோஸ் சாறு தயாரிக்க, முதலில் முட்டைக்கோஸை வெட்டி சுத்தமான தண்ணீரில் கழுவவும். பின்னர் முட்டைக்கோஸ் மற்றும் சிறிது தண்ணீரை பிளெண்டரில் போட்டுக் கொள்ளவும். இதையடுத்து, சல்லடையால் வடிகட்டவும், விரும்பினால், எலுமிச்சையையும் சேர்க்கலாம், மறுபுறம், சாற்றில் உப்பையும் பயன்படுத்தலாம்.

Kokila

Next Post

தனது கிராமத்திற்காக மலையையே குடைந்த கூலி தொழிலாளி!... உத்தரகாண்டில் ஆச்சரியம்!... காரணம் இதோ!

Thu Mar 16 , 2023
உத்தராகண்ட் மாநிலம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஒருவனாக மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளியான இவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க 500 மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து சாலை அமைத்துள்ளார். சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் […]

You May Like