fbpx

செம்பருத்தி பூ ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?… ரெசிபி இதோ!

செம்பருத்தி பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது . ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் கொண்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு தேவையான சுகாதார நலன்களை வழங்குகிறது. எடை கட்டுபடுத்தும் செயல்களை மேற்கொள்கிறது-. நினைவாற்றலை மேம்படுத்தும், செரிமான பிரச்சனைக்கு தீர்வாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஒரு கப் செம்பருத்தி பூவின் தேநீர் கொழுப்பை குறைக்கிறது. செம்பருத்திப் பூ இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.
இதன் பட்டை ,வேர் ,இலை அனைத்தும் மிகுந்த பயன்களை கொண்டது. இது ஒரு மூலிகை செடி என்பதே பொருத்தம். செம்பருத்தி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ – 10, தண்ணீர் – 3 கப்
எலுமிச்சம் பழம் – 1, சர்க்கரை – தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விடவும்.

செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்கவும். வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். தேவையான சர்க்கரை கலக்கவும். சுவைமிக்க ‘செம்பருத்தி பூ ஜூஸ்’ தயார்.
செம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்
தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். நாழும்10 பூவினை மென்றுதின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டிபடும், ஆண்மை எழுச்சி பெறும்.

உலர்த்திய பூ சூரணத்துடன் முருங்கைப்பூ அல்லது விதைஉலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும் இன்பம் நீடிக்கும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய நீர்விட்டுக் கரைத்து வடிகட்டிக்கலந்து சிறுதீயில் எரித்துக்குழம்புப் பதமாக்கி (செம்பரத்தை மண்ப்பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி.யாகக் காலை மாலை சாப்பிட்டு வர உட் சூடு, நீரெருச்
சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம், நீர்கட்டு ஆகியவை தீரும். இந்தப்பூவின் கசாயத்துடன் மான் கொம்பு பற்பம் ஒரு கிராம் அளவு சேர்த்து 10-20 நாள் சாப்பிட இதயத்துடிப்பு ஒழுங்கு படும். படபடப்பு இருக்காது. குருதி தூய்மையாகும். குருதி மிகுதியாக உற்பத்தியாகும். பாரிச வாய்வும் குணமாகும். இதன் மகரந்தக் காம்பு உலர்திய தூள் 5 கிராம் பாலில் சாப்பிட மலடு நீங்கும்.

Kokila

Next Post

Woww...! மாற்று திறன் குழந்தைகளை பராமரிக்க மாதம் தோறும் ரூ.4,500...! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு...!

Tue Apr 18 , 2023
ரூ.1.76 கோடி செலவில் மாற்று திறன் குழந்தைகளை பராமரிக்க மாதம் தோறும் ரூ.4,500 மதிப்பூதியம் வழங்கப்படும். சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; நவீன கருவி வாசிக்கும் திட்டம் ரூ.1.4 கோடி செலவில் உயர்கல்வி பயிலும் பார்வை குறைவான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 14,000 உதவித்தொகை வழங்கப்படும். […]

You May Like