fbpx

கடலை மிட்டாயில் இத்தனை நன்மைகளா?… புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது!… ஆய்வில் தகவல்!…

கடலை மிட்டாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

வேர்க்கடலை மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாயில், உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சாப்பிடும் நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொடிய நோயான புற்றுநோயையே தடுக்கும் ஆற்றல் கொண்ட கடலை மிட்டாயை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாப்பிடலாம். உணவு உண்ட பிறகு, ஒரு துண்டு கடலை மிட்டாய் சாப்பிட்டால் போதும். செரிமானம் சிறப்பாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கடலை மிட்டாயை இனிப்பு என்று ஒதுக்காமல், சாப்பிட்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அளவற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

கடலை மிட்டாயை சாப்பிடுவதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மிகவும் கொடிய நோயான புற்றுநோய் வருவதனையும் தடுக்கும் வல்லமை பெற்றது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவி செய்கிறது. உடலில் இருக்கும் உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது. சிறந்த உடல் எடையை பராமரிக்கவும், உடல் பருமன் உண்டாவதை தடுக்கவும் உதவுகிறது. எலும்புகளுக்கு பலத்தை பெற்றுக் கொடுக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது. மேலும், கெட்ட கொழுப்பையும் குறைக்கிறது. உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் கடலை மிட்டாயை சாப்பிடுவதால் கிடைக்கிறது.

Kokila

Next Post

ஸ்லீப்பிங் பியூட்டி இவர்தான்!... தினமும் 22 மணிநேரம் தூங்கும் அதிசய பெண்!... அறியவகை நோய் பாதிப்பு!...

Sat Mar 4 , 2023
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வரை தூங்கும் அரிய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் Castleford நகரத்தைச் சேர்ந்த 38 வயதான ஜோனா காக்ஸ், தன்னை நிஜ வாழ்க்கையில் தூங்கும் அழகி என்று அழைக்கப்படுகிறார். இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்பது ஒரு நரம்பியல் தூக்கக் கோளாறு ஆகும். இது ஒரு முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் ஒரு நபருக்கு தூக்கத்தை ஏற்படுத்தும். இந்த கோளாறு […]

You May Like