fbpx

இத்தனை வேறுபாடுகளா?… 4 திசைகளிலும் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது தெரியுமா?

இந்தியாவில் பல காலமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை தீபாவளி. பல ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையோடு பல மத நம்பிக்கைகளும் இணைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இது பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் 5 நாட்களும், தென்னிந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மாதிரியும் கொண்டாடப்படும் தீபாவளி மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம்.

கிழக்கு இந்தியாவில் முக்கியமான சடங்குகளும் பொதுவாகத்தான் இருக்கிறது. விளக்குகள், தீபங்கள், மெழுகுவர்த்திகள் ஏற்றுவது மற்றும் பட்டாசு வெடிப்பது என வழக்கமான தீபாவளி கொண்டாட்டங்களாகவே இருக்கிறது. சிலர் தங்கள் வீடுகளில் வாசல்களை திறந்து வைத்திருப்பார்கள். அப்போதுதான் லட்சுமி தேவி வருகிறார் என்று நம்புகிறார்கள். வீடுகள் வெளிச்சத்துடன் பிரகாசமாக காட்சியளிக்கும். லட்சுமி இருண்ட வீட்டில் லட்சமி வரமாட்டார்கள் என்பது நம்பிக்கை.

மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை, தீபாவளி பூஜை முடிந்த 6 நாட்களில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி, காளி பூஜையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளின் பின்னரவில் காளி பூஜை கொண்டாடப்படுகிறது. பல இடங்களில் காளி பூஜை பந்தல்கள் பல இடங்களில் போடப்படும். மற்ற சடங்குகள் அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கும். ரங்கோலிகள் வீடு முழுவதும் போடப்படும். தீபாவளி இரவில் முன்னோர்கள் வழிபாடு நடைபெறும். அன்றிரவு தீபங்கள் ஏற்றப்பட்டு, அவர்களின் ஆன்மாக்களுக்கு சொர்க்கம் செல்ல வழிகாட்டப்படும். இந்தப்பழக்கம் பெங்காலின் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருந்துவரும் பழக்கம்.

மேற்கு வங்கத்தைப்போல், ஒடிசாவிலும், தீபாவளி முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. எங்கள் முன்னோர்கள், கடவுள் என அனைவரும் எங்கள் வீடுகளுக்கு மகாளாய அமாவாசை இருள் இரவில் வருகிறார்கள். இப்போது அவர்கள் மீண்டும் சொர்கத்துக்கு திரும்பி செல்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு நாங்கள் வெளிச்சம் காட்டுகிறோம். ஜெகன்னாதரின் பாதங்களில் அமைதிகொள்ளுங்கள்.

குஜராத்தில் தீபாவளிக்கு முதல் நாள் இரவு, குஜராத்திகள் தங்கள் வீடுகளின் முன் ரங்கோலிகளை போடுவார்கள். மேற்கிந்தியாவில் ரங்கோலி, தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு அங்கம். லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாக பாதச்சுவடுகள் வரையப்படும். தீபாவளியன்று வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படும். குஜராத்திகளுக்கு தீபாவளி புத்தாண்டுபோல் கொண்டாட்டம் நிறைந்தது.

இந்த நாளில் புதியதாக ஒன்றை துவங்கலாம். சொத்துக்கள் வாங்கலாம். புதிய கடைகள், அலுவலகங்கள் திறக்கலாம். திருமணம் போன்ற நிகழ்வுகள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குஜராத்தின் சில வீடுகளில், இரவு முழுவதும் நெய் விளக்கு ஏற்றிவைக்கப்படும். அடுத்தநாள் அதிலிருந்து சேகரிக்கப்பட்ட கரும்புகை கண் மை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் செல்வம் கொண்டு வருவதாக கருதப்படுகிறது. வட இந்தியாவைப்போல் மேற்கிந்தியாவிலும், தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

மஹாராஷ்ட்ராவில் 4 நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. முதல் நாள் வசுபராஸ் என்று அழைக்கப்படுகிறது. அன்று பசுக்களுக்கும், கன்றுகளுக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது. இது அம்மாவுக்கும், குழந்தைக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்துவதை குறிக்கும். அடுத்த நாள் தனதிரியோதசி, அது மற்ற பகுதிகளில் கொண்டாடுவதைப்போல் கொண்டாடப்படும்.

மூன்றாம் நாள் நரக்சதுர்தசி அன்று மக்கள் எண்ணெய் குளியல் விடியல் காலையில் குளித்துவிட்டு, கோயிலுக்குச் செல்வார்கள். மஹாராஷ்ட்ரா ஸ்டைலில் மதிய விருந்து தயாரிக்கப்படும். அதில் இனிப்பு, காரம் எல்லாம் இருக்கும். இது ஃபாரல் என்று அழைக்கப்படுகிறது. நான்காவது நாள் தீபாவளி, லட்சுமி பூஜையும் நடைபெறும். ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி, செல்வ பொருட்களான பணம், நகை என அனைத்தும் வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

Kokila

Next Post

தாக்குதலை கைவிடாத இஸ்ரேல்..!! காஸாவில் இதுவரை 11,000 பேர் பலி..!! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Sat Nov 11 , 2023
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் காஸா பகுதியில் இதுவரை 11,000 பேர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 35வது நாளாக உக்கிரமடைந்துள்ள நிலையில், காஸாவில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் போரை நிறுத்துமாறு ஐநா, மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் தங்கள் நாட்டவரை விடுவிக்காதவரை, ஹமாஸ் அமைப்பை அடியோடு அழிக்காதவரை […]

You May Like