fbpx

பருத்திப்பாலில் இவ்வளவு மருத்துவ குணங்களா?… எங்காவது பார்த்தால் விட்டுவிடாதீர்கள்!… வெரைட்டி ரெசிபிகள் இதோ!

பருத்திப்பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர், உடல் எடை குறைக்க உதவுகிறது. மேலும் இதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வெரைட்டி ரெசிபிகளை பார்க்கலாம்.

பருத்திப்பால் ஒரு இனிப்புச்சுவையான உணவு வகையாகும். தமிழ்நாட்டின் மதுரையில் சாலையோரக்கடை முதல் எல்லா இடங்களிலும் கிடைக்கும். ஜிகர்தண்டா போல பருத்திப்பாலும் மதுரையில் மிகவும் பிரசித்தம் இது பச்சரிசிமாவு, பருத்திவிதை, கருப்பட்டி, ஏலக்காய், சுக்கு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. பருத்திக்கொட்டையிலிருந்து பனைவெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்திப்பால் உடல் அசதிக்கு சிறந்த மருந்தாகும்.

இந்த பருத்திப்பாலுக்கு மட்டும் ஒரு விசேஷம் உண்டு. டம்ளரில் ஊற்றிவிட்டால் சூடு குறையவே குறையாது. ஊதி ஊதி பொறுமையாகத்தான் குடித்தாக வேண்டும். சில சமயம் கொதிக்கிற பாலை அவசரப்பட்டு வாயில் ஊற்றி நாக்குவெந்துபோவதும் உண்டு! சின்ன வயதில் இந்தப் பருத்திப்பால் குறித்த சந்தேகம் நிறையவே வரும். இதை எப்படி தயாரிக்கறாங்க.. பருத்தி என்றதுமே மனசுக்குள்ளே பஞ்சு முளைத்த செடிதான் நினைவுக்கு வரும். ஒருவேளை அந்த பஞ்சை கசக்கிப்போட்டு பால் காய்ச்சுவாங்களோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த பருத்திப்பால் பருத்தி விதைகளை கொண்டு செய்யப்படுகிறது என்பது பின்னால்தான் தெரியவந்தது.

பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு. இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது. நெஞ்சு சளியை விரட்டும். ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். இந்த பருத்திவிதைக்கு நெஞ்சுசளியை போக்கும் ஆற்றல் இருக்கிறது. பருத்திப் பாலில் B காம்ப்ளக்ஸ் சத்து இருக்கு. பசி உணர்வை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளியை குறைக்கும். நெஞ்சுவலியை கட்டுப்படுத்தும். 25 கிராம் பருத்தி இலையை, 100 மில்லி பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குறையும்.

பருத்திப்பால் செய்ய தேவையான பொருட்கள்: பருத்திக் கொட்டை – 100 கிராம், பச்சரிசி – 3 டேபிள்ஸ்பூன், வெல்லம் – 300 கிராம், சுக்கு – சிறிது அளவு, தேங்காய் துருவல் – தேவையான அளவு. செய்முறை: பருத்திக் கொட்டையை நன்கு ஊறவைத்து மிக்சியில் மீண்டும் மீண்டும் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். அரைத்த பச்சரிசி மாவை பருத்தி பாலுடன் கலந்து அடுப்பில் ஏற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். பால் கலவை சிறிது கெட்டியாக பொங்கி வரும் போது வெல்லம் கலந்து கிளறிக் கொண்டே இருக்கவும். வெல்லம் முழுதும் கரைந்தவுடன் சுக்கு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும். சூடான சுவையான பருத்திப் பால் தயார்.

கருப்பட்டியுடன் செய்முறை: பருத்தி விதை – 2 கைபிடி, கருப்பட்டி – 100 கிராம், தேங்காய் பால் – அரை மூடி சுக்கு – அரைவிரளளவு, அரிசி மாவு – 2 ஸ்பூன், ஏலக்காய் – 2; பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் ஊறிய விதையை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்க வேண்டும். கருப்பட்டியை தூளாக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும் .ஓரு பாத்திரத்தில் பருத்திவிதை பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும் . ஒரு கொதி வந்த உடன் கருப்பட்டி பாலையும் தேங்காய் பாலையும் ஊற்றி காய்ச்ச வேண்டும். இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அக் கலவையை கொதிக்கும் பருத்தி பாலில் சேர்த்து கரண்டியால் தொடர்ந்து இரண்டு நிமிடம் கிளறி பாத்திரத்தை இறக்கி விடவேண்டும். சுக்கை சிறிது வறுத்து பொடியாக்கி ,ஏலக்காயை பொடியாக்கி இறுதியில் சேர்க்க வேண்டும்.

பருத்தி விதையை முதல் நாள் நன்றாக ஊற வைத்து, மறுநாள் நன்கு கழுவி விடவும். பின் பருத்தி விதையை ஆட்டி வடிகட்டி முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும். அதில் முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதன் பின் வறுத்த சேமியாவை நன்றாக உடைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். பிறகு வெள்ளத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு வடுகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்கவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், அதில் உலர்திராட்சை, முந்திரி சேர்த்து லேசாக வறுத்து பின், அதனுடன் தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும். இளம் பொன்னிறம் வரும் வரை வறுத்து பின் அதை பருத்தி பால் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பின் ஏலம், சுக்கு தட்டி போட்டி ஒரு கொதி வரும் போது இறக்கினால் ருசியான சேமியா பருத்தி பால் தயார்.

Kokila

Next Post

புங்க மரத்தின் அருமை தெரியுமா உங்களுக்கு!... மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு இதுதான்!... டிரை பண்ணுங்க!

Wed Apr 12 , 2023
சுத்தமான காற்றை கொடுக்க கூடிய புங்க மரத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நல்ல சுத்தமான காற்றை கொடுக்கும் புங்க மரம், வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது.புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாகிறது. புங்க […]

You May Like