ஹோம் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு என்ன என்பதை தெரிந்துகொள்வோம்
மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைத்து வீடு வாங்குகின்றனர். அதனால் தான் இது மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஆனால், பலர் தங்கள் வாழ்நாளின் மிக முக்கியமான முதலீடான தங்களின் வீட்டை பாதுகாக்க மறந்து விடுகிறார்கள். உங்கள் அதிநவீன உபகரணங்கள் மற்றும் அழகிய உட்புற வடிவமைப்புகள் முதல் உங்கள் நகைகள் மற்றும் பிற விலைமதிப்புள்ள உடைமைகள் வரை பாதுகாக்கப்பட வேண்டும்; உங்கள் வீடு என்பது வெறுமனே புறச் சொத்து மட்டுமன்றி, நீங்கள் நினைப்பதை விடவும் மிகவும் மதிப்புமிக்கது.
அதனால் தான், உங்கள் வீட்டின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய காரியங்களில் ஒன்று, குறைந்தபட்சம் ஒரு ஹோம் இன்சூரன்ஸ் எடுப்பது தான். ஹோம் இன்சூரன்ஸ் உங்கள் வீட்டினை பாதுகாப்பதற்கும், கொள்ளைச் சம்பவங்கள், வெள்ளம், தீ விபத்து மற்றும் நிலநடுக்கம் போன்ற ஏதேனும் தீர்மானிக்கப்படாத, எதிர்பாராத சந்தர்ப்பங்களில் காப்புறுதி வழங்குவதற்கும் உதவுகிறது.
ஸ்ட்ரக்சர் இன்சூரன்ஸ் (Structure insurance): இந்த வகை இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் வரும் திட்டங்கள் அனைத்தும் கட்டிடத்திற்கு வரும் சேதங்களால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய உதவுகிறது. கட்டிடத்தின் கூரை, சமையலறை/ பாத்ரூம் ஃபிட்டிங்கள் போன்ற அனைத்துக்குமான காப்பீடு இந்த பாலிசியில் வழங்கப்படும்.
ஹோம் கன்டென்ட் இன்சூரன்ஸ் (Home content insurance):ஒருவேளை உங்கள் வீட்டில் வைத்திருக்க கூடிய பொருட்களை இழக்க நேர்ந்தாலோ அல்லது அதற்கு சேதம் ஏற்பட்டாலோ இந்த வகையான இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் பெற்றிருக்கும் பொழுது நீங்கள் இழந்த பொருளுக்கான மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான தொகையை காப்பீடாக பெற்றுக் கொள்ளலாம். இந்த பாலிசி நகை, எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மர சாமான்கள் போன்றவற்றிற்கு கவரேஜ் வழங்குகிறது.
காப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் (comprehensive insurance): பெயர் குறிப்பிடுவது போலவே இந்த வகையான ஹவுஸ் இன்சூரன்ஸ் பல்வேறு வகையான காப்பீட்டை வழங்குகிறது. கட்டடத்தின் அமைப்பு தவிர அதில் இருக்கக்கூடிய பொருட்கள் மற்றும் வசிக்கக்கூடிய நபர்களுக்கு கூட காப்பீடு வழங்குகிறது.
லேண்ட்லாட்ஸ் இன்சூரன்ஸ் (Landlord’s insurance):இந்த வகையான திட்டம் தங்களது வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ள வீட்டு உரிமையாளர்கள் சந்திக்கும் பொருளாதார இழப்புகள் மற்றும் வேறு சில பொது லையாபிலிட்டிகளுக்கு காப்பீடு வழங்க உதவுகிறது. கூடுதலாக தீ விபத்து மற்றும் குறிப்பிட்ட சில பிரச்னைகள் காரணமாக வீட்டின் கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதத்தில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது.
டெனண்ட் இன்சூரன்ஸ் (Tenant insurance):வாடகை வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் தங்களது வீட்டில் வைத்துள்ள பொருட்களுக்கு காப்பீடு பெறுவதற்கு இந்த வகை இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் வீட்டு உரிமையாளர் எடுத்துள்ள எந்த ஒரு இன்சூரன்ஸும் வாடகைக்கு இருப்பவர்களின் பொருட்களுக்கான இழப்பீடுகளை வழங்காது.
ஃபயர் இன்சூரன்ஸ் (Fire insurance): இது ஒரு குறிப்பிட்ட காப்பீட்டை மட்டும் வழங்குகிறது. வீட்டில் தீ விபத்து காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு இந்த பாலிசி மூலமாக காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். பர்கலரி தெஃப்ட் அண்டு ராபரி இன்சூரன்ஸ் (Burglary, theft and robbery insurance): இந்த குறிப்பிட்ட இன்சூரன்ஸ் பாலிசி திருட்டு, கொள்ளை அல்லது வழிப்பறி காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கு அன்றைய மார்க்கெட் வேல்யூவின் அடிப்படையில் இழப்பீடுகளை வழங்குகிறது.