அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் குடும்பத்தினர் வந்தனர். ஆனால், ஐஸ்வர்யா ராய் இல்லாமல் இவர்கள் வந்திருப்பதால் விவாகரத்து சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற திரை நட்சத்திரங்களில் அமிதாப்பச்சனும் ஒருவர். இன்று காலை தனது மகன் அபிஷேக் பச்சனுடன் இவர் அயோத்தி வந்தடைந்தார். ஆனால், இவர்களுடன் ஐஸ்வர்யா ராய் வரவில்லை. ஏற்கனவே, அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை வலம் வருகிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் இல்லாமல் இவர்கள் வந்திருப்பது விவாகரத்து யூகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மாமியார் ஜெயா பச்சனுடன் ஏற்பட்ட சண்டையால் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாகவும், இதனால் தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.