fbpx

அதிபர் வேட்பாளரா கமலா ஹாரிஸ்..!! முன்பே கணித்த பிரபல கார்டூன் தொடர்!

அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகியுள்ளதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் வேட்பாளராகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவரே ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு வெளியான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்டூன் தொடரின் 11-வது சீசனின் 17-வது எபிசோடான ‘பார்ட் டூ தி ஃபியூச்சர்’-ல் (எதிர்காலத்தில் பார்ட்) லிஸா சிம்ப்ஸன்ஸ் எனும் கதாபாத்திரம் 2030-ம் ஆண்டில் அமெரிக்காவின் முதலாவது பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கார்டூனில் லிஸா சிம்ப்ஸன்ஸ் அணிந்திருக்கும் பர்ப்பிள் நிற ஆடை மற்றும் முத்துகளாலான அணிகலனை போன்று, ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கமலா ஹாரிஸும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிம்ப்ஸன்ஸ் தொடரில் காண்பிக்கப்பட்ட பல சம்பவங்கள் நிஜத்தில் நடந்துள்ளதால், கமலா ஹாரிஸ் இந்த முறை அமெரிக்க அதிபராவார் என்று சமூக வலைதளவாசிகளும், சிம்ப்ஸன்ஸ் தொடரின் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

முன்னதாக, டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பிரபல கார்டூன் நிகழ்ச்சியான நிகழ்ச்சியான தி சிம்சன்ஸ் முன்கூட்டியே கணித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர். சிம்சன்ஸ் கார்டூன் இதற்கு முன்பும் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு டிரம்ப் அதிபராவது, தானாக இயங்கும் கார்கள், விஆர், எபோலா எனப் பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

English Summary

Social netizens and fans of The Simpsons are saying that Kamala Harris will be the President of the United States this time because many of the events shown in the Simpsons series have happened in reality.

Next Post

LIC Saral Pension plan : ஒரே முதலீடு ஓஹோனு வாழ்க்கை... எல்ஐசி-ன் அசத்தல் பென்சன் திட்டம்..!

Mon Jul 22 , 2024
India's largest life insurance company LIC Charles Benson Scheme is the scheme introduced by (LIC). It is a single premium plan

You May Like