திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சிரமமான காரியம் என்றால் அதில் ஒரு விளம்பரத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என இருந்தது , என்னடா இது சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வந்த சோதனை என்பது போல இருந்தது.
பொதுவாக வரன் தேடுபவர்கள் என்ன நிறத்தில் இருக்க வேண்டும், பெண்ணுக்கு சமமானவரா , என்ன உயரத்தில் மாப்பிள்ளை இருக்க வேண்டும், தாய் தந்தை மற்றும் குடும்பத்தின் பின்னணி , எப்படிப்பட்டவர் என்பது போன்ற பொதுவான விஷயங்கள் பற்றி அலசி ஆராய்வார்கள். பின்னர் பெண் பார்க்கவந்த பிறகு பொருத்தம் எப்படி இருக்கும் என பார்ப்பார்கள்.
ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரத்தில் ’’சாஃப்ட் வேர் இன்ஜினியர்கள் கைன்ட்லி டோன்ட் கால் ’’ என இருந்தது பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இதை பகிர்ந்த சிலர் என்னடா இது திடீரென சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வந்த சோதனை எனவும் பகிர்ந்திருந்தனர். இப்போதெல்லாம் தங்களுக்கு இப்படித்தான் மாப்பிள்ளை வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
அந்த விளம்பரத்தில், “ஹிந்து சைவப் பிள்ளை பிரிவைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. இந்த பெண் மிகவும் அழகாக இருப்பார். பிசினஸ் செய்யும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் போன்ற பணியில் இருப்பவர்கள், முதுநிலை மருத்துவர்கள் அல்லது தொழிலதிபர்கள் போன்ற மாப்பிள்ளை தேவை. அதே சமயம், சாஃப்ட்வேர் பொறியாளர்களாக வேலை செய்பவர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ள வேண்டாம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.