fbpx

பூமியை தாக்கும் சூரிய புயல்!… வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!… மனிதர்களுக்கு பெரும் ஆபத்து!… நாசா எச்சரிக்கை!

சூரியனால் வெளியிடப்படும் வெப்பமான காற்று மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் 2 நாட்களுக்கு வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் ‘Solar Storm’ சூரிய புயல் என அழைக்கப்படுகிறது. ஒரு பெரிய காந்த வெடிப்பு நிகழும்போது இது நிகழ்கிறது. இந்த புயல்கள் இணையம் முதல் ஆற்றல் வரை ஒவ்வொரு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்பையும் பாதிக்கின்றன. மேலும் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. இந்தநிலையில், இன்னும் இரண்டு நாட்களில் சூரியன் பிரகாசமாக இருக்கும் என்றும், அதிக வெயிலின் தாக்கம் மற்றும் வெப்பக் காற்று வெளியாகும் என்றும் நாசா எச்சரித்துள்ளது.

அதாவது, சூரியப் புயல் ஏப்ரல் 24-ஆம் தேதி பூமியைத் தாக்கும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி இன்னும் வலுவான வெப்பம் ஏற்படும் என்று நாசா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதன்படி, மக்கள் கூடுமானவரை வெளியில் செல்லவேண்டாம் என்றும், அதிகளவு தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் சூரிய சக்தியின் அதிகபட்ச அளவை நெருங்கும் போது சூரிய நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரிக்கும். மேலும் இது பூமியில் உள்ள நமது வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பத்தையும், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்களையும் பாதிக்கும் என்று நாசா எச்சரித்ததுள்ளது.

Kokila

Next Post

இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.41,000 வழங்கப்படும்!... தென்கொரியா அறிவிப்பு!... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!

Tue Apr 25 , 2023
தனிமையில் இருக்கும் இளைஞர்கள் சமூகத்தோடு ஒன்றிணைய சுமார் 650,000 கொரியன் வோன் அல்லது மாதத்திற்கு சுமார் $500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 ஆயிரம்) வழங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தனிமை என்பது மிகவும் கொடுமையான விஷயம். பிற மக்களோடு சகஜமாக பழகாமல் தனிமையில் இருப்பது ஒரு நபருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும், மேலும் இது பல வழிகளில் ஒருவரை கடுமையாக பாதிக்கும். தென் கொரியாவை பொறுத்த வரை […]

You May Like