Soldiers: தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா அமைதிப்படையின் மூன்று தளங்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, இந்தியா ராணுவ வீரர்களின் நிலை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில், நேற்று தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகளின் மூன்று தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அமைதிப்படை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா., கூறியிருந்தது.
இந்த தாக்குதல்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 120 கிலோமீட்டர் புளூ லைனில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து கவலை கொண்டுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 600 இந்திய வீரர்கள் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐநா வளாகத்தின் நேர்மையை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், ஐநா அமைதிப்படையின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை செயல்படும் லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு சர்வதேச கண்டனம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனாவும், தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அமைதி காக்கும் படையினர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயல் என்று சீனா கூறுகிறது. இதுமட்டுமின்றி, UNIFIL-க்கு ராணுவ வீரர்களை அனுப்பும் நாடான இத்தாலி, இதுபோன்ற செயல்கள் போர்க்குற்றம் என்ற பிரிவில் வரலாம் என்றும் கூறியுள்ளது. அமெரிக்காவும் இந்த தாக்குதல்கள் குறித்து கவலையடைவதாக கூறியுள்ளது.
Readmore: கிரிக்கெட் வீரர் டூ டிஎஸ்பி!. முகமது சிராஜ்-க்கு தெலங்கானா அரசு கவுரவம்!