கடிகாசலம் என்று போற்றப்படும் திருத்தலம் சோளிங்கர். சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள். சலம் மலை என்றுபொருள். அதனால்தான் சோளிங்கர் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகாசலம் என்றெல்லாம் புராணத்தில் பெயர்கள் அமைந்துள்ளன. சோளிங்கர் மலையின் மீது இருந்தபடி இந்த வையத்து மனிதர்களையெல்லாம் வாழ அருளிக்கொண்டிருக்கிறார் நரசிம்மர்.
இவரது பெயர் ‘பக்தவச்சலப் பெருமாள்’. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார். 108 திவ்ய தேசங்களில் 65 வது திவ்ய தேசமாக இந்த சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் உள்ளார். இங்குதான் விசுவாமித்திரரும் பிரம்மரிஷிபட்டம் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இந்த திருத்தலத்தில் சப்தரிஷிகளுக்கு இடையூறாக இருந்த ஜோதிடர் அரக்கர்களை கொல்ல பெருமாள் ஹனுமனை அனுப்பினார். வெற்றி பெற முடியவில்லை. எனவே, தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை கொடுத்து அரக்கனை வதம் செய்தார். பின்பு ஹனுமனும் யோக நரசிம்மரை தரிசித்து பின்பு, இங்கு யோக ஆஞ்சநேயராக இருக்கிறார்.
இங்குள்ள யோக நரசிம்மருக்கு, சூரியன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் பெயர் கொடுக்கின்றன. இதில், சனி என்ற கிரகம் வலிமையாக உள்ளது. இக்கோயிலுக்கு படிக்கட்டு வழியே சென்று தேன், பால் மற்றும் பழம் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வந்தால் தனவரவு அதிகமாகும். தனவரவில் தடை ஏற்பட்டாலும் புனர்பூதோஷம் நல்லெண்ணெய் மற்றும் பன்னீர் வாங்கி கொடுத்து வந்தால் புனர்பூ தோஷ நீங்கும் திருமணம் நடந்தேறும்.
சிறப்புகள் : யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்துவிட்டால், இதுவரை இருந்த தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் போகும். காரியம் யாவும் வீரியமாகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் அகலும். இழந்த பொருளை, பிரிந்த உறவை, பதவியை, கெளரவத்தைத் திரும்பப் பெறுவது உறுதி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
கேன்சர் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இக்கோயிலுக்குச் சென்று நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் வழிபட்டு, உளுந்து வடையும் தேனும் பன்னீரும் நெய்வேத்தியம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு கொடுத்தால் கேன்சர் போன்ற குறைபாடுகளில் தீர்வு கொடுக்கும்.
Read more : ஆந்திர துணை முதல்வர் பவண் கல்யாண் மருத்துவமனையில் அனுமதி..!! என்ன ஆச்சு..?