fbpx

பருமனான கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க சில எளிய டிப்ஸ்!… தினமும் 30 நிமிடம் இதை செய்யுங்கள்!

உடல் பருமனான கர்ப்பிணிகள் ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுக்கு உதவும் சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் தனக்கும் குழந்தைக்கும் என இருவருக்குமே சாப்பிட வேண்டும் என்ற கருத்தை நாம் நம்ம வேண்டாம். தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதிகளவில் வேண்டாம். எந்தவொரு உணவையும் மங்கலான உணவையும் தவிர்க்க முற்படுங்கள். ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை பெறுவதிலும், ஆரோக்கியமாக இருப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.

உங்களால் பசியை தவிர்க்க முடியாது. பசிக்கும் நேரம் மிதமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் கலோரிகளை எடுப்பதை தவிர்த்து வயிறு நிரப்பக் கூடிய உடம்பிற்கு ஆற்றலைத் தரக்கூடிய கலோரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்க உடம்பை போதுமான நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி மிக முக்கியமானது. கொஞ்சம் காலார நடப்பது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது போன்றவற்றை செய்து வாருங்கள். இருப்பினும் எல்லாவற்றையும் எச்சரிக்கையுடன் செய்யுங்கள். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கர்ப்ப கால மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதை எடுக்காமல் தவற விட்டு விடாதீர்கள்.

எடையைக் கட்டுக்குள் முயற்சியை மேற்கொள்ளுங்கள் – தினசரி குறைந்தது 30 நிமிடங்களாவது நீச்சல் மற்றும் நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்புள்ள, புரத உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவுச்சத்து அதிகம் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள் செயற்கை இனிப்புகளைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக இயற்கையான இனிப்புடன் கூடிய உணவு மற்றும் பானங்களை சாப்பிடுங்கள்.

Kokila

Next Post

மணத்தக்காளி பழத்தை சாப்பிட்டால் புற்றுநோயே வராதாம்!... எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

Sat Apr 1 , 2023
மணத்தக்காளி கீரையை போலவே அதன் பழங்களிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பொதுவாக மணத்தக்காளி கீரையை தான் நாம் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால் அதன் பழங்களில் உள்ள மருத்துவ குணங்களை நாம் அறியாமல் அதனை சாப்பிடுவதில்லை. மணத்தக்காளி கீரையின் தண்டு, இலை, காய், பழம் அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை. இந்த பழம் சிவப்பு, மற்றும் கருப்பு என்று இரண்டு நிறங்களில் இருக்கும். இதை காயாக இருக்கும் போது பறித்து […]

You May Like