fbpx

1000 சிவனுக்கு சமம்.. புராணக் கதைகளுக்கு பெயர் பெற்ற சோமேஸ்வரசுவாமி கோவில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

இந்தியாவில் கோயில்களுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது புதிதாக கட்டப்படும் கோயிலை தவிர, முன்னோர்களால் கட்டபட்ட ஒவ்வொரு பெரிய கோயிலும் பல புராண, வரலாற்று கதைகளை நினைவு படுத்தும் விதமாகக உள்ளன. நாம் பல கோயில்களில் சுவாமி தரிசனம் செய்திருப்போம். அந்த வகையில் பல அதிசயங்களை கொண்ட சிவன் கோவில் ஒன்று ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ளது. இந்த கோவில் இந்தியாவின் பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

பெரும்பாலும் கோயில்கள் அனைத்தும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். ஆனால் சோமேஸ்வரசுவாமி கோவில் மட்டும் வித்தியாசமாக மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இக்கோயிலில் சிவலிங்கத்தின் மீது மாலை நேரத்தில் சூரிய ஒளியும், இரவில் சந்திரனின் கதிர்களும் விழுவது ஆச்சரியம். பல பெருமை வாய்ந்த புராணக் கதைகளுக்கு பெயர் பெற்றது என்றே சொல்லலாம்.

புராணக் காலத்தில் தக்ஷ மகாராஜாவிற்கு 64 மகள்கள் இருந்ததாக கூறப்படுகிறது.  இவர்களில் 27 மகள்களும் தங்களது பெண் குழந்தைகளை சந்திரனிடம் கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக கோவில் வரலாறு கூறுகின்றனர். ஆனால் சந்திரன், தாரா , ரோகினி என்ற பெயருடைய இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதை அறிந்த தக்ஷாவின் மகள்கள், இனிமேல் சந்திரனோடு சேர்ந்து வாழப்போவதில்லை என தந்தையிடம் முறையிட்டாகதாக தெரிகிறது. இதனால் கோபம் கொண்ட தக்ஷா உடனடியாக சந்திரனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் சந்திரனோ இதை பற்றி கவலை கொண்டதாக தெரியவில்லை. தன் பேச்சை மதிக்காததால் கோபமுற்ற தக்ஷன், சந்திரனுக்குத் தொழுநோய் வரும்படி சாபமிட்டார். இந்த சாபத்தை போக்க பல புண்ணிய நதிகளில் நீராடினான் சந்திரன்.

ஆனால் தொழுநோய் மட்டும் அகலவேயில்லை என கூறப்படுகிறது. நொறுங்கிப்போன சந்திரன், இனியும் தன்னால் தொழுநோயில் இருந்து மீளமுடியாது என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் வம்சதாரா நதியில் சில நாட்கள் குளித்தால் தொழுநோய் குணமாகும் என்று புராணங்களில் எழுதப்பட்டிருப்பதை அறிந்த சந்திரன், அங்கு சென்று வரலாறு கூறியபடியே செய்தார்.

பின்னர் சந்திரன் தனது கரங்களால் மேற்கு நோக்கி இருக்கும் பிரம்மசூத்திரத்துடன் கூடிய சிவலிங்கத்தை அங்கே நிறுவினார். இந்தக் கோயிலுக்கு வருகை தந்து லிங்கத்தை தரிசித்து, சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நம் உடலில் உள்ள நாள்பட்ட நோய்கள் தீரும் என கோயில் வரலாறு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஆண்டு முழுவதும் இந்த சோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு பக்தர்கள்கள் ஆயிரக்கணக்கோனோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

Read more : அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக 4 பேர் நியமனம்..!! – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

English Summary

Someswaraswamy Temple is famous for its mythological stories..!! Do you know where it is?

Next Post

திரையரங்குகளில் இரவு 11 மணிக்கு மேல் குழந்தைகளை அனுமதிக்க கூடாது...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Wed Jan 29 , 2025
Children should not be allowed in movie theaters after 11 pm.

You May Like