fbpx

‘எங்கையோ கணக்கு இடிக்குதே’..!! அரசு வேலை அறிவித்த அண்ணாமலை..!! பாயிண்ட்டை பிடித்த பிடிஆர்..!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், அப்போது தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கணகராஜ், “இவங்களுக்கெல்லாம் கூச்சமே இருக்காதா? இவங்க தலைவரு ஆண்டுக்கு 2 கோடி வேலைன்னாரு. அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு 2.397 கோடி வேலை தருவாராம். முதல்ல உங்க தலைவர் கிட்ட 100 நாள் வேலையை கொடுக்கச் சொல்லுங்க. ஒன்றிய அரசுப் பணிகளில் காலியாகவுள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப சொல்லுங்க” என எக்ஸ் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டிருந்தார்.

இதனை மேற்கோள் காட்டியுள்ள தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் மொத்தமே 9.5 லட்சம் அரசுப் பணிகள் உள்ள நிலையில், எப்படி 2.397 கோடி பேருக்கு வேலை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு ஒப்பீட்டுக்கு – தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்.

பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று. அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?” என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

Chella

Next Post

தொண்டர்களே இல்லாத காங்.,!… பிரதமர் பதவிக்கு தகுதியானவர்களே இல்லை!… அண்ணாமலை விளாசல்!

Tue Feb 6 , 2024
இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை” என வந்தவாசியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நேற்றுமாலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வலிமைக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி, 3-வது முறையாக மீண்டும் பிரதமாக வர […]

You May Like