fbpx

மனைவியுடன் மாமியார் வீட்டிற்குள் நுழைந்த மருமகன்..!! மடியில் படுத்திருந்த கள்ளக்காதலன்..!! கடைசியில் அதிர்ச்சி சம்பவம்..!!

புதுச்சேரியில் உள்ள குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த ரம்யா (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் கலைவாணர் நகரில் முகுந்தனின் மாமியார் கோமதி, வீடு எடுத்து வசித்து வருகிறார். கோமதி வீட்டின் எதிரிலேயே முகுந்தனும் ரம்யாவும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், மாமியார் கோமதிக்கும், தேவா (23) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் மருமகன் முகுந்தனுக்கு தெரியவந்ததை அடுத்து, தேவாவையும் மாமியார் கோமதியையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், தேவாவுக்கு முகுந்தன் மீது விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு முகுந்தன் மனைவி ரம்யாவுடன் புதுச்சேரியில் ஒரு திரையரங்கில் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு மாமியார் வீட்டிற்குள் மனைவியுடன் முகுந்தன் நுழைந்தார்.

அப்போது மாமியாரின் வீட்டில் தேவா இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முகுந்தன் கோமதி மற்றும் தேவாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தேவா, அப்போது எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாராம். இரவு முழுவதும் கடும் கோபத்தில் இருந்த தேவா, மறுநாள் அதிகாலை 4 மணியளவில் மீண்டும் முகுந்தன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு முகுந்தனை ஆவேசமாக திட்டியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த முகுந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, தேவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தன் கணவரின் நிலையை கண்டு ரம்யா அதிர்ச்சியடைந்து, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அங்கு ஓடிவந்த அக்கம்பத்தினர், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வங்க போலீசார் முகுந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேவாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

கல்வான் மோதல்!… பிண்ணனி குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்ட பாதுகாப்புதுறை!

Mon Aug 14 , 2023
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, கிழக்கு லடாக்கிற்கு 68,000 இந்திய ராணுவ வீரர்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டனர் என்று பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, சீன நடவடிக்கைகள் மீது பருந்து-கண் விழிப்புடன் இருக்க இந்திய ராணுவம் (IAF) கணிசமான எண்ணிக்கையிலான தொலைதூர பைலட் விமானங்களை (RPAs) நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் பல பிரிவுகளை விமானத்தில் கொண்டு சென்றது. மொத்தம் […]

You May Like