fbpx

’தந்தையை போட்டுக் கொடுத்த மகன்’..!! திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

திமுகவினர் இந்தி கொள்கையில் மக்களை ஏமாற்றி வருவதாக கூறியுள்ள திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநில செயலாளருமான சூர்யா சிவா, இதற்கு ஆதாரமாக தனது தந்தையின் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, கடந்த மே மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா சிவா நியமிக்கப்பட்டார். திமுகவில் 15 ஆண்டுகளாக உழைத்த தனக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. திமுக சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார். மேலும், திமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்.

’தந்தையை போட்டுக் கொடுத்த மகன்’..!! திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

இந்நிலையில், தற்போது திமுக இந்தி திணிக்கப்படுவதாக கூறிவரும் சூழலில், தனது தந்தையின் வீடியோ ஒன்றை சூர்யா சிவா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், திமுக தலைவர்களின் கொள்கை சான்று. மக்கள் இனி ஏமாற தயாராக இல்லை. உங்கள் மொழி அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுப்படாது” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீடியோவில், தனக்கு இந்தி தெரியாது என்று திருச்சி சிவா கூறும் வீடியோவையும், இந்தியில் அவர் பாட்டு பாடுவது போன்ற வீடியோவை சூர்யா சிவா இணைத்து பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

Bigg Boss 6 Tamil: ’வெள்ளை சட்டைப் போட்ட அரசியல்வாதியா’..? விக்ரமனை சீண்டிய அஸீம்..!! பரபரப்பு வீடியோ

Fri Oct 21 , 2022
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் 2-வது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் வாரம் நட்பு.. அதன் பின் வஞ்சகம்… தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பல பேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் வாரம் […]
'Bigg Boss - Season 6'..!! தீபாவளியை கொண்டாடிய போட்டியாளர்கள்..!! திடீரென மயங்கி விழுந்த நடிகை..!!

You May Like