காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி வயிற்றுப் பிரச்சினை காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கையின்படி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், சோனிய காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும், மருத்துவமனையால் உறுதிப்படுத்தப்பட்டபடி கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இப்போது சீராக உள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.