fbpx

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.. பெரிய அளவில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. இதனிடையே சாமானிய மக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது..

அந்த வகையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் தொற்று உறுதியாகி உள்ளது.. இந்தத் தகவலை அக்கட்சியின் எம்பியும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியானது.. அரசாங்க நெறிமுறையின்படி அவர் தனிமையில் இருப்பார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜூன் மாதம் கோவிட் பரிசோதனை செய்த சோனியா காந்தி, பின்னர் டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. பின்னர் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் தொற்று உறுதியாகி உள்ளது..

Maha

Next Post

இமாச்சலில் மேகவெடிப்பு... தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் நிலச்சரிவில் இடிந்து விழுந்த விடியோ காட்சி வைரல்..!

Sat Aug 13 , 2022
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இப்பொழுது கனமழை பொய்து வருகிறது. மேலும், அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து வருவதால் வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் இதுவரை மழை வெள்ள பாதிப்பினால் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குல்லு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிக்கி 55 வயது பெண் சாவேலு தேவி, 17 வயது மாணவி கிருத்திகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அந்த மாவட்டத்தில் மற்றொரு […]

You May Like