fbpx

சோனியா காந்தி அதிர்ச்சி..!! விதிமுறைகளை மீறிய ராஜீவ் காந்தி அறக்கட்டளை..!! மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

சோனியா காந்தி அதிர்ச்சி..!! விதிமுறைகளை மீறிய ராஜீவ் காந்தி அறக்கட்டளை..!! மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, 1991ஆம் ஆண்டு ஜூன் 21இல் அமைக்கப்பட்டது. சோனியா காந்தி தலைமையில் இயங்கும் இந்த அறக்கட்டளையில், மன்மோகன்சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே அசோக் கங்குலி உள்ளிட்டோர் அறங்காவல்களாக இருக்கின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

துணை சபாநயகர் திடீர் மரணம்!!

Sun Oct 23 , 2022
சட்டப்பேரவை துணை சபாநாயகர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணமடைந்ததால் பா.ஜ.க.வினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ஆனந்த் மாமணி பொறுப்பில் உள்ளார். இவர் 3 முறை சவுதாட்டி என்ற தொகுதியில் பா.ஜ. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 56, மனைவி , ஒரு மகன் மற்றும் ஒருமகள் உள்ளனர்.சக்கரை நோய், கல்லீரல் நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு மாத […]

You May Like