fbpx

மகனின் உடல்நிலை..!! திருநெல்வேலி பெண்ணை தேர்ந்தெடுத்தது ஏன்..? மனம் திறந்த நெப்போலியன்..!!

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். தனுஷின் உடல்நிலை காரணமாக அவரால் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வர முடியாது. கப்பலில் வந்தாலும் நீண்ட நாட்கள் ஆகும். எனவே, திருமணத்தை ஜப்பானில் வைக்க திட்டமிட்டுள்ளார் நெப்போலியன்.

முக்கியமாக தனுஷின் உடல்நிலையை காரணம் காட்டி பயில்வான் ரங்கநாதன், தமிழா தமிழா பாண்டியன் உள்ளிட்ட சிலர் அவதூறாக பேசினர். ஆனால், தனுஷுக்கு திருமணம் நடக்கவிருப்பது மகிழ்ச்சியான விஷயமே. எனவே, அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர்தான் தனுஷின் திருமண பத்திரிகை தொடர்பான வீடியோ வெளியானது. அது ஓலைச்சுவடி வடிவில் இருந்தது.

இந்நிலையில், மகனின் திருமணம் குறித்து பேசியிருக்கும் நெப்போலியன், “நான் எனது மகனின் உடல்நிலைக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும், எனக்கு வரவேண்டிய மருமகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வரவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் தனுஷுக்கு திருநெல்வேலியில் இருந்து பெண் எடுத்தேன். அக்‌ஷயா மிகவும் நல்ல பெண்” என்று கூறியுள்ளார்.

Read More : திருமண வரன் தேடும் ஆண்களே உஷார்..!! காவல்துறையை கூட விட்டு வைக்கல..!! இவர்கள் தான் குறியாம்..!!

English Summary

Although I have settled in America for my son’s health, I thought my daughter-in-law should come from Tamil Nadu.

Chella

Next Post

25 பெண்களுடன் கல்யாணம்.. 2 நாளில் எஸ்கேப்.. கல்யாண ராமன் சிக்கியது எப்படி?

Mon Jul 29 , 2024
This man has done 25 marriages, his only motive is one, when the secret is revealed..

You May Like