நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 23ஆம் தேதியன்று சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. வியாழக்கிழமை காலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்தது. மாலையில் ரோவர் நிலவில் நகரத் தொடங்கி தனது செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்தது. இந்த பிரக்ராயன் ரோவர் 14 நிலவு நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரோ தனது சமூக வலைதள பக்கத்தில், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை ஏற்கனவே அங்கிருக்கும் சந்திரயான் – 2இன் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள High – Resolution Camera அழகாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. நிலவில் இருக்கும் கேமராக்களிலேயே மிகவும் துல்லியமான கேமரா இதுதான் என இஸ்ரோ கூறியுள்ளது.