சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியல் 3 ஆண்டு வரைக்கும் ஒளிபரப்பாகி, 811 எபிசோடுகளோடு முடிவடைந்தது. அதுபோல மெட்டி ஒலி சீரியல் கன்னட, மலையாள,இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்தும் ஒளிபரப்பாகி வந்தது. அது மட்டும் அல்லாமல் அப்போது அந்த நேரத்தில் இந்த சீரியல் அதிகமான டிஆர்பியை பெற்று ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த சீரியலில் டெல்லி குமார் அப்பா கேரக்டரில் நடித்திருப்பார். அவருக்கு காயத்திரி, காவேரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா என ஐந்து மகள்களும் மருமகன்களும் என குடும்பம் கதையாக இந்த சீரியல் பலருடைய அபிமான சீரியல் ஆக இருந்து வந்தது. அந்த காலகட்டத்தில் தெருவில் நடந்து கொண்டு போகும் போது கூட பல வீடுகளில் இந்த சீரியலுக்கான “அம்மி அம்மி அம்மி மிதித்து” என்ற பாடல் அப்போது ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்க முடியும்.
இப்போதைய சூழ்நிலையில் பலருடைய வாழ்க்கை தரம் மேம்பட்டு இருந்தாலும் இப்போதும் இந்த சீரியல் குறித்து 90’s கிட்ஸ்கள் மட்டும் அல்லாமல் அவர்களுடைய அம்மா, அப்பாக்கள் கூட பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக இப்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த சீரியலில் இயக்குனர் திருமுருகன் மீண்டும் மெட்டிஒலி சீசன் 2 எடுக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இது அதிகமானோருக்கு ஹாப்பி நியூசாக தான் இருக்கும். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் அதுபோலவே இனி மெட்டிஒலி 2 சீரியலும் அதிகமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.