இஸ்ரேல் மீதான எங்களின் தாக்குதல் ஆரம்பம் மட்டுமே என்று ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-காசா மோதல் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “இஸ்ரேல் மீதான எங்களின் தாக்குதல் ஆரம்பம் மட்டுமே. உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம். விரைவில் உலகம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் வரும். முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
லெபனான், சிரியாவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் பாலஸ்தீனியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிராக அநீதி, அடக்குமுறை மற்றும் கொலைகள், குற்றங்கள் இல்லாத 510 மில்லியன் சதுர கிமீ கொண்ட நிலப்பரப்பு ஒரு அமைப்பின் கீழ் வரும்” என்று தெரிவித்திருக்கிறார். முன்னதாக ஒவ்வொரு ஹமாஸ் போராளிகளையும் கொல்வோம் என இஸ்ரேல் சபதம் எடுத்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பிணை கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பிணை கைதியை அனுப்பி அவர்களை தூக்கிலிட போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.