சமூகத்தின் மிகவும் விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு தற்போது கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் இவர்கள் மேலும் பயன் பெரும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவசமாக சர்க்கரையும் வழங்க டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் சிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்க டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திநேற்றைய தினம் இது தொடர்பான அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இனி விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக விரைவில் வழங்கப்படவுள்ளது.
அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச சர்க்கரை வழங்கப்படும். இந்த சலுகை ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் உள்ள 68,747 தேசிய உணவுப் பாதுகாப்பு அட்டைதாரர்கள் மற்றும் மொத்தம் 2,80,290 தனிநபர்கள் பயனடைவார்கள். இம்முயற்சிக்கான நிதி ஒதுக்கீடு ரூ.111 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.