fbpx

கூடிய விரைவில்..!! டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி..!!

சென்னை செல்வதற்காக நேற்றிரவு மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “வாய்ப்பிருந்தால் உறுதியாக டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்” என்றார். மேலும், கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, எடப்பாடி நடத்திய பொதுக்குழு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை சட்ட நியதிக்கு புறம்பாகவே நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார் ஓபிஎஸ். முன்னாள் அமைச்சர்கள் பரபரப்பாக பேட்டி தருகிறார்களே என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் சென்றார்.

Chella

Next Post

”மக்களே கவனமா இருங்க”..!! தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

Fri Mar 17 , 2023
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், […]

You May Like