fbpx

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த தென் ஆப்ரிக்கா அணி..!

T20 world cup 2024: 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி, 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஸ்மத்துல்லா ஓமர்சாய் மட்டும் 10 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மார்கோ ஜான்சன் மற்றும் தப்ரேஸ் ஷம்சி தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். மேலும் ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்துய் ரசிகர்களுக்கு அதிர்ச்சசி அளித்தார். அதன் பிறகு பொறுமையாக விளையாடிய, ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மார்க்கரம் (29) மற்றும் ஐடன் மார்க்ராம் (21) அட்டமிழக்காமல், தென் ஆப்ரிக்கா அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் 57 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More: இந்திய அணியில் இடம்பெறாத வருண் சக்கரவர்த்தி..!! விரக்தியுடன் போட்ட பதிவு வைரல்..!!

English Summary

South Africa beat Afghanistan by 9 wickets to enter the final.
in competition

Kathir

Next Post

5G அலைக்கற்றை ஏலம் | ரூ.11,340 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா!!

Thu Jun 27 , 2024
The government has reportedly stated that they received Rs 11,340 crore through the auction of a total quantum of 141.4 MHz spectrum. This year (2024), the auction has seen activity in 900MHz, 1800MHz, 2100MHz and 2500 MHz bands.

You May Like