fbpx

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி….. நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தோல்வி…..

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் பாக்கியராஜ் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வடபழனியில் உள்ள இசை யூனியனில் தொடங்கிய தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் பாக்கியராஜ் மற்றும் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் மடிவுகள் 5.30 மணி அளவில் வெளியானது. இதில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். இப்போட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் 2 அணியினர் போட்டியிட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாக்கியராஜ் கூறுகையில் , ’’ எழுத்தாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் என்னை தலைவராக தேர்வு செய்துள்ளனர். எனவே அவர்களின் கதைக்கு பாதுகாப்பு, கதை உரிமை அவர்களுக்குண்டான ஊதியம் இது தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்…….’’ என்றார்..

Next Post

’முதல்வர் எழுதிய புத்தகத்தை படிக்க ஆர்வம் காட்டும் சீமான்’..! ஏன் தெரியுமா?

Sun Sep 11 , 2022
முதலமைச்சர் முக.ஸ்டாலின் எழுதியுள்ள திராவிட மாடல் புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட மாடம் என்பது ஒரு வேடிக்கை. திராவிடம், திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்த பிறகே திரவிடத்தை அதிகமாக பேசுகின்றனர். திராவிட மாடல் என்ற புத்தகம் வந்தால் நானும் வாங்கி படிக்க ஆர்வமாக […]
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு..!! ’இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள்’..!! சீமான்

You May Like