நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று (ஜன.26) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா உள்ளிட்ட 139 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து மத்திய அரசு கௌரவித்து உள்ளது. இதில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்து போட்டிகள் மிகுந்த திரைத்துறையில் உச்சத்தில் ஒரு இடம் பிடித்து, அரியதொரு போட்டியில் உலக வரைபடத்தில் தன் பெயரை பொன்னேட்டில் பதித்த நண்பர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமை கொள்கிறது.
நடனமும், நடிப்பும் அடையாளமாய் குடும்பத்தில் தோன்றி, அவ்வடையாளங்களை விளங்கிய இன்னும் ஆழப்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பரதம் என்னும் கலையை பரீட்சித்து, புது வடிவம் கண்டெடுத்து, அதைப் பாரெங்கும் புகழ் மணக்க ஆடிப் பெருமை சேர்த்த சகோதரி ஷோபனாவுக்கு பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததில் தென்னிந்திய நடிகர் சங்கம் பேரானந்தம் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பத்மபூஷண் விருது பெற்ற அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Read more :உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..? தேவையில்லாத கட்டுக்கதைகளை நம்பாதீங்க!