fbpx

என்ன நடந்தது?. நான் ஏன் இங்கே இருக்கிறேன்?; 179 பேரை பலி கொண்ட விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர் கூறியது என்ன?.

Plane crash: தென்கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர். தென் கொரியாவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. முதலில் 85 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இருவர் மட்டுமே இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சுயநினைவுடன் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தென்கொரிய மண்ணில் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் நடந்த மிக மோசமான விமான விபத்து இது என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவர் 32 வயதான லீ மற்றும் 25 வயதான குவான் என கொரிய டைம்ஸ் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் விமான குழு உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, குவானுக்கு தலை மற்றும் கணுக்காலில் பலத்த காயமுடன் உள்ளார் என்றும் அவர்களால் இந்த விபத்து குறித்து நினைவுபடுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் “அவளுடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், விபத்து பற்றி அவளிடம் கேட்க எங்களுக்கு நேரம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். 

விபத்து குறித்து  லீ கூறுகையில், “என்ன நடந்தது? நான் ஏன் இங்கே இருக்கிறேன்?” விமானம் தரையிறங்கிய பிறகு என்ன நடந்தது என்பதை தன்னால் நினைவில் கொள்ள முடியவில்லை என்றும், தரையிறங்குவதற்கு முன்பு தனது சீட் பெல்ட்டைக் கட்டியிருந்ததை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார். அவரது எதிர்வினை அதிர்ச்சியின் விளைவாக இருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறினார்.

Readmore: ‘உடல் உறவுகள்’ என்ற சொல் பாலியல் வன்கொடுமை என்று அர்த்தப்படுத்த முடியாது!. டெல்லி உயர்நீதிமன்றம்!.

English Summary

South Korean plane crash kills 179 people! Who are the 2 survivors?

Kokila

Next Post

பெரும் சோகம்..!! கேஸ் சிலிண்டர் வெடித்து 6 ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு..!! பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு..?

Mon Dec 30 , 2024
It is suspected that the incident may have occurred because the gas cylinder was not properly turned off after cooking at the house where the Sabarimala Ayyappa devotees were staying.

You May Like