fbpx

தமிழகமே…! முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவ மழை…!

இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை 3 நாட்கள் முன்கூட்டியே இன்று தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை 3 நாட்கள் முன்கூட்டியே இன்று தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மே 31-ம் தேதி தென்மேற்குப் பருவ மழை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

Vignesh

Next Post

'யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்...' நிபுணர்களின் கருத்து என்ன?

Sun May 19 , 2024
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. ஆனால், வருமானம் ஈட்டும் சில நபர்களிடையே பெரும் குழப்பம் உள்ளது. எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்காது. ஏனெனில் அரசு வழங்கும் வருமான வரி விலக்கு வரம்புக்குள் அவர்களின் வருமானம் இருக்கும். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என நினைக்கின்றனர். ஆனால், இது தவறானது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் வருமானம் ஈட்டும் தனிநபரின் ஆண்டு வருமானம் […]

You May Like