fbpx

அடுத்த 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை துவக்கம்..!! இயல்பைவிட அதிக மழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

அடுத்த 5 நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு முன்னதாகவே தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்றவாறு, தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜூன் – செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ”தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை 5 நாளில் துவங்க வாய்ப்புள்ளது. நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கும். வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும், வடகிழக்கு இந்தியாவில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும். நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read More : வாஷிங் மெஷினில் போடும் துணிகளில் இனி சுருக்கமே வராது..!! இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

English Summary

The Indian Meteorological Department has announced that the southwest monsoon is likely to start in Kerala in the next 5 days.

Chella

Next Post

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்கும் பெற்றோர்களே... புற்றுநோய் ஏற்படும் அபாயம்...!

Tue May 28 , 2024
குழந்தைகளுக்கு சுவைக்காக அதிக கொழுப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை சேர்ப்பதால் புற்றுநோய் ஏற்பட அபாயம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாக ஒரு நவீன உடல்நலக் கேடாக சித்தரிக்கப்படுகின்றன. உடல் பருமன், இதய நோய், புற்றுநோய் மற்றும் ஆரம்பகால மரணம் போன்றவற்றை ஏற்படுத்த கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள் உலகளவில் உண்ணப்படும் உணவில் கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் […]

You May Like