fbpx

பரபரப்பு.. பாமக போராட்டம் தொடங்குவதற்கு முன்பே சவுமியா அன்புமணி கைது..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும், கைதான ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மாணவி அளித்த புகாரின் பேரில், பதிவான எப்ஐஆரில் மாணவியின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் வகையிலான வார்த்தைகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சியினர் காவல்துறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கு திமுக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்ட நடத்த திட்டமிட்டனர்.

பாமக மகளிர் அணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும், காவல்துறையின் அனுமதியை மீறி அறிவித்தபடி போராட்டம் நடத்த பாமக திட்டமிட்டுள்ளது., இந்த போராட்டம் தொடங்குவதற்கு முன்பே அந்த இடத்திற்கு வந்த சவுமியா அன்புமணியை போலீசார் கைது செய்தனர்.

காரில் இருந்து இறங்குவதற்கு முன்பே, சவுமியா அன்புமணியின் காரை சூழ்ந்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் 5க்கும் மேற்பட்ட வேன்களின் தொண்டர்கள் மற்றும் பாமக மகளிர் அணியை சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுமியா அன்புமணி மற்றும் தொண்டர்களை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மண்டபத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more ; பச்சை நிறத்தில் ரூ.5000 நோட்டுகள்.. சமுக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா? – RBI விளக்கம்

English Summary

Sowmiya Anbumani was arrested before the protest started.

Next Post

வீட்டு வைத்தியம் மூலம் பல் சொத்தை, பல் வலியை குணப்படுத்தலாம்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க..!!

Thu Jan 2 , 2025
Oil pulling is an Ayurvedic and can help relieve tooth decay or cavities.

You May Like