fbpx

யூரோ 2024 கோப்பையை வென்றது ஸ்பெயின்!. அதிக முறை பட்டம் வென்ற அணி என்ற சாதனை படைத்து அசத்தல்!.

Euro 2024: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணிக்காக மைக்கேல் ஓயர்சபல் மற்றும் நிகோ வில்லியம்ஸ் ஆகியோர் கோலடிக்க, கோல் பால்மரின் முயற்சி பலனளிக்காமல் போக, ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. 24 அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரிலிருந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப்பெற்றன. முதல் பாதி கோல்கள் இல்லாமல் முடிந்தத நிலையில் இரண்டாம் பாதியின் 47வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கோல் கிடைத்தது.

நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) கோல் அடிக்க அதற்கடுத்த 73வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கோலே பால்மர் (Cole Palmer) the edge of the boxயில் உதைத்த பந்து கோலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 86வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் (Mikel Oyarzabal) அடித்த கோல், அந்த அணியின் வெற்றி கோலாக மாறியது. கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து கோல் அடிக்காததால், இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 17 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார். இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: பா.ஜ.க-வின் அடுத்த தேசிய தலைவர் யார்…? புதிய தலைவரை டிசம்பருக்குள் நியமிக்க முடிவு…!

English Summary

Spain won the Euro Cup! The team that has won the title the most times is amazing!

Kokila

Next Post

அடி தூள்..‌! புதிதாக 1.48 லட்சம் பேருக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று வழங்கப்படும்...!

Mon Jul 15 , 2024
Magalir urimai thogai 1.48 lakh new people will be given today.

You May Like