fbpx

விஜய் டிவி “புகழ் வீட்ல விசேஷம்”..! அவரே பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி..

விஜய் டிவியில் 4 சீசன்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி ’குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் புகழ். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் தன பென்சி என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் புகழ், தந்தையான மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அவருடைய பதிவில், ‘என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள். ஆனால் இன்று அவள் அளித்த பரிசுக்கு ஈடு இணையே இல்லை.

என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ. இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!’ எனக் கூறியுள்ளார். ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை இந்த ஜோடிக்கு பகிர்ந்து வருகின்றனர்.

Kathir

Next Post

ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்.டி. வரி வசூல் 1.59 லட்சம் கோடி!… கடந்த ஆண்டைவிட 11% உயர்வு!… மத்திய நிதியமைச்சகம்!

Sat Sep 2 , 2023
ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்.டி. வரி வசூல் சுமார் ரூ.1,59,069 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது. நடப்பாண்டு ஆகஸ்டில், பொருட்களின் இறக்குமதி […]
கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.43 லட்சம் கோடி..! மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

You May Like