fbpx

அசத்தல்…! 7-ம் தேதி ஆதார்‌ அட்டைகளை புதுப்பித்துக்‌ கொள்ள சிறப்பு முகாம்‌…! முழு விவரம் இதோ…

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள்‌ தங்களது ஆதார்‌ அட்டைகளை புதுப்பித்துக்‌ கொள்ள சிறப்பு முகாம்‌ 07.12.2022 அன்று முதல்‌ தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; UIDIA இந்திய தனித்துவ அடையாளம்‌ ஆமயைம்‌ சார்பாக வழங்கப்பட்டுள்ள ஆதார்‌ அட்டை மத்திய மற்றும்‌ மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள்‌ பெற்றிடவும்‌, வங்கி தொடர்பான சேவைகளை பெற்றிடவும்‌ பயன்படுகிறது. இந்நிலையில்‌ மத்திய மின்னணு தகவல்‌ தொழில்‌ நுட்ப அமைச்சகம்‌ ஆதார்‌ விதிமுறைகளில்‌ திருத்தம்‌ செய்துள்ளது. அதன்‌ பேரில்‌ ஆதார்‌ அடையாள அட்டைதாரர்கள்‌ 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார்‌ அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்‌.

கடந்த 8 முதல்‌ 10 ஆண்டுகளுக்கு முன்னர்‌ எடுக்கப்பட்ட ஆதார்‌ அட்டைதாரர்கள்‌ தங்களது ஆதார்‌ அட்டையில்‌ உள்ள அடையாள சான்று மற்றும்‌ முகவரி சான்று ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர்‌ அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர்‌ உரிமம்‌, பான்‌ கார்டு, வங்கி கணக்கு புத்தகம்‌ புதுப்பிக்க கட்டணம்‌ ரூ.50 ஆகியவற்றுடன்‌ அருகில்‌ உள்ள ஆதார்‌ சேவை மையத்தினை அணுகவும்‌ அல்லது மை ஆதார்‌ என்ற இணையதளத்திலும்‌ புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌.

மேலும்‌, ஆதார்‌ புதுப்பிக்கும்‌ பணி மேற்கொள்ளும்‌ பொருட்டு தமிழ்நாடு மிண்ணணுவியல்‌ கழகம்‌ (எல்காட்‌) மூலம்‌ கிராமங்கள்‌ தோறும்‌ சிறப்பு முகாம்‌ நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆதார்‌ சிறப்பு முகாம்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ தருமபுரி ஒன்றியம்‌ கடகத்தூர்‌ கிராமத்திலும்‌, பாலக்கோடு ஒன்றியம்‌ கரகதஅள்ளி கிராமத்திலும்‌, பென்னாகரம்‌ ஒன்றியம்‌ கூத்தபாடி கிராமத்திலும்‌, அரூர்‌ ஒன்றியம்‌ சின்னாங்குப்பம்‌ கிராமத்திலும்‌, வருகின்ற 07.12.2022 அன்று காலை 10.00 மணி முதல்‌ சிறப்பு முகாம்‌ தொடங்கப்பட உள்ளது.

சூப்பரோ சூப்பர்..!! ’ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் இனி கவலை வேண்டாம்’..!! இதை மட்டும் பண்ணுங்க..!!

இச்சிறப்பு முகாமிற்கு வரும்‌ பொதுமக்கள்‌ ஆதார்‌ புதுப்பித்திட தேவையான ஆவணங்களான வாக்காளர்‌ அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர்‌ உரிமம்‌, பான்‌ கார்டு, வங்கி கணக்கு புத்தகம்‌ புதுப்பிக்க கட்டணம்‌ ரூ.50 ஆகியவற்றுடன்‌ பொதுமக்கள்‌ தங்களின்‌ ஆதார்‌ அட்டைகளை புதுப்பித்துக்‌ கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் லேப்டாப் பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும் -முதல்வர் அறிவிப்பு

Sat Dec 3 , 2022
மாணவர்களுக்கு சைக்கிள் மற்றும் லேப்டாப் ஆகியவை பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கூறியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அறிவியல் கண்காட்சி புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியின் நிறைவு விழாவிற்கு புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி கலந்து கொண்டார். விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி “பிள்ளைகளுக்கு வசதி, வாய்ப்புகளைக் கொடுத்தால் […]

You May Like