fbpx

தமிழகமே…! வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்…! தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய முகாம் இன்று நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள். நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 01.04.2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக நவம்பர் 18, 19 ஆம் தேதிக்கு பதிலாக இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

வரப்போகின்ற புத்தாண்டில் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் 3 ராசிகள்.! உங்க ராசியும் இதில் இருக்கா.?

Sat Nov 25 , 2023
இன்னும் ஒரு மாதத்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் புதிய லட்சியங்களுடன் புதிய ஆண்டில் கால் அடி எடுத்து வைக்க இருக்கிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளம் ஆகியவை பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். புதிய வருடத்தில் கிரகணங்களும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்று பார்ப்போம். மேஷ ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய இருக்கிறது. இந்த […]

You May Like