fbpx

கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பா..? பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமாகி உள்ளது. கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில், விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், ”பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும், மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக்கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : பெண்ணை பலாத்காரம் செய்த நபரின் வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்..!! குவியும் பாராட்டு..!!

Chella

Next Post

BREAKING | பதிவான வாக்குகளை அறிவிப்பதில் குழப்பம் ஏன்..? முதல்முறையாக விளக்கம் கொடுத்த சத்யபிரதா சாஹூ..!!

Mon Apr 22 , 2024
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன்.? என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செயலியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால், தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், செயலியில் கிடைத்த தகவலை அறிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் […]

You May Like