fbpx

பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு படை!… இங்கிலாந்தில் புதிய திட்டம் தொடக்கம்!… பிரதமர் ரிஷி சுனக் அதிரடி!…

இங்கிலாந்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் சிறப்பு படை ஒன்றை உருவாக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பாக இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்களாக இருப்பதாகவும் உள்துறை மந்திரி சூயெல்லா பிராவர்மன் கூறியிருந்தார். இதையடுத்து, பாலியல் குற்றங்களை தடுக்கவும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாப்பதற்காக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்ட இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மையத்தில் பணிபுரியும் ஒரு புதிய அவசர பணிக்குழுவை பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இதன்பின் பேசிய பிரதமர் ரிஷி சுனக், இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி, பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது தவறு, குற்றம் செய்தவர்கள் இனி தப்பி முடியாது. சமூகங்களில் உள்ள சுரண்டலை வேரறுக்க அதிகாரிகள் மற்றும் நிபுணர்க செயல்பட வேண்டும் என்றும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.

Kokila

Next Post

கழுதைப் பாலில் சோப்பு!... பெண்ணின் உடலை என்றென்றும் அழகாக வைத்திருக்கும்!... மேனகா காந்தியின் பேச்சால் சர்ச்சை!

Wed Apr 5 , 2023
கழுதைப் பாலில் தயாரிக்கப்படும் சோப்பு ஒரு பெண்ணின் உடலை என்றென்றும் அழகாக வைத்திருக்கும் என்ற பாஜக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அத்தொகுதியின் எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கழுதை பால் சோப்பு ஒரு பெண்ணின் உடலை எப்போதும் அழகாக வைத்திருக்கும்” என்று […]

You May Like