fbpx

குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு உயர்நிலை குழு அமைப்பு..! – மத்திய அரசு

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து உலக அளவில் குரங்கம்மை பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணமடைந்துள்ளார். ஆனால், கேரளாவில் ஜூலை 30ஆம் தேதி 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரை பரிசோதனை செய்தபோது குரங்கம்மை பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு உயர்நிலை குழு அமைப்பு..! - மத்திய அரசு

இதற்டையே, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் நேற்று தலா ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 35 வயது நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு நாடு முழுவதும் குரங்கம்மை பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, குரங்கம்மை நோயை கண்டறிந்து முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், அதனை தடுப்பதற்கான அடுத்தக்கட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளது.

குரங்கம்மை பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு உயர்நிலை குழு அமைப்பு..! - மத்திய அரசு

குரங்கம்மை பரவை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய அரசு சிறப்பு உயர்நிலை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு தலைவராக சுகாதார உறுப்பினர் வி.கே.பால் நியமிக்கப்பட்டுள்ளார். குரங்கம்மை பாதிப்புகளுக்கான பரிசோதனைகளை அதிகரித்தல் மற்றும் தடுப்பூசிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை இக்குழு மத்திய அரசுக்கு வழங்கும் என கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும் யாருக்கேனும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் அரசே அந்த தகவலை வெளியிடும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

#Covid 19: நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்தை தாண்டிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...! 34 பேர் உயிரிழப்பு...!

Tue Aug 2 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,734 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 34 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,897 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like