இந்தியாவில் ரயில்வே துறை முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக உள்ளது. மேலும், ரயில்களில் நிம்மதியாக பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தும் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெண்கள் மற்றும் வயதின் அடிப்படையில் இருக்கைகள் அறிவிக்கப்படும். எனினும், மாற்றுத்திறனாளிகள் மேல் இருக்கை கிடைப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் ஸ்லீப்பர் க்ளாசில் (எஸ் பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் நடுப்படுக்கை ஒதுக்கப்பட வேண்டும் என ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று 3 அடுக்கு ஏசி பெட்டிகளில் ஒரு நடுப்படுக்கையும், 3 அடுக்கு ஏ.சி எகானாமிக் பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும் ஒரு நடுப்படுக்கையும் ஒதுக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.