fbpx

விஜய்-ன் தாயார் செய்த சிறப்பு பூஜை! எதற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் நேற்றைய தினம் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

Kathir

Next Post

#திண்டுக்கல்: சுத்தியலால் சம்பந்தியின் கள்ளக்காதலுக்கு தீர்வு கட்டிய உறவினர்..! 

Tue Dec 27 , 2022
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கருமநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையப்பன் (50). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையில் முத்துலட்சுமியும், வையப்பனும் நண்பர்களாகியுள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த முத்துலட்சுமியின் சம்பந்தியான சக்திவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதற்குப் பிறகும் வையப்பன் முத்துலட்சுமியின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. வீட்டில் […]

You May Like