fbpx

மதுரையில் சிறப்பு தபால் நிலையங்கள்!… பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக வடிவமைப்பு!

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அவர்களே தொட்டு உணர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பு தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை ஸ்காட் ரோடு தலைமை தபால் நிலையத்திலும் மற்றும் தல்லாகுளம் தலைமை தபால் நிலையத்திலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அஞ்சலக சேவைகள் பெறவும், எந்த சேவைக்கு எங்கு செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் அறியவும் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. எனவே பிறரின் துணையின்றி தாமாகவே எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பாதை, பிரெய்லி முறையில் எழுதப்பட்ட சைனேஜ் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையத்துக்கு வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தாங்களே தொட்டு உணர்ந்து கவுன்டரை அடையும் வகையில் சிறப்பு டைல்ஸ் கொண்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், “எந்த சேவைக்கு எந்த அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய பிரெய்லி முறையில் எழுதப்பட்ட சைனேஜ் பலகையும் நிறுவப்பட்டுள்ளது” என மதுரை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு… எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்..! தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு…

Sat Sep 2 , 2023
தேசிய மருத்துவ கவுன்சில் (NMC) சமீபத்தில் எம்பிபிஎஸ் (மருத்துவ இளங்கலை, அறுவை சிகிச்சை இளங்கலை) பாடத்திட்டத்தில் கணிசமான மாற்றங்களை வெளியிட்டது, இது மருத்துவக் கல்வித் துறையில் கவனத்தையும் விவாதங்களையும் ஈர்த்துள்ளது. இந்த மாற்றங்கள், 2024-2029 ஆண்டு மருத்துவ மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட உள்ளது, இந்த மாற்றம் மருத்துவக் கல்வியை சீரமைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று, எம்பிபிஎஸ் திட்டத்தில் கற்பிக்கப்படும் பாடங்களின் எண்ணிக்கையைக் 24ல் […]

You May Like